Ticker

6/recent/ticker-posts

ஆளில்லா வானூர்தி மிரட்டல் - ஆற்றலை வலுப்படுத்தும் சிங்கப்பூர்


சிங்கப்பூர் ஆளில்லா வானூர்தி மிரட்டலைக் கையாளும் ஆற்றலை வலுப்படுத்தும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அதன் விவரங்கள் இடம்பெற்றன

சில நாடுகள் போரில் ஆளில்லா வானூர்தியை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துவதை அவர் குறிப்பிட்டார்.

ஆளில்லா வானூர்திகள் விலை மலிவாகக் கிடைக்கின்றன. சுலபமாகவும் கிடைக்கின்றன. மிகச் சிறப்பாகச் செயல்படுகின்றன, அதனால் ஆபத்தும் அதிகம் என்றார் திரு வோங்.

கண்காணிப்புக்கு மட்டுமல்ல துல்லியமாகத் தாக்கவும் அது பயன்படுத்தப்படுகின்றது.

சிங்கப்பூர் எப்போதும் மற்ற நாடுகளை நம்பியிருக்க முடியாது; மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும் என்றார் பிரதமர்.

தாக்குப்பிடித்து நிற்கவும் நாட்டின் தற்காப்புக்கும் சிங்கப்பூர் மட்டுமே பொறுப்பு என்றார் அவர்.

எல்லா நிலைகளிலும் ஆளில்லா வானூர்தி மிரட்டல்களை அடையாளம் கண்டு அவற்றை முறியடிக்க உரிய ஆற்றலை வளர்க்க அரசாங்கம் முதலீடு செய்யும் என்று பிரதமர் சொன்னார்.

seithi


 


Post a Comment

0 Comments