Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-20


ஒழுக்கமுடைமை

குறள் மொழி 55

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

குறள் எண் : 131

குறள் மொழியின் பொருள் :

ஒழுக்கம் எல்லோருக்கும் சிறப்பினைக் கொடுக்கும். எனவே ஒழுக்கத்தை உயிரைவிட மேலானதாகக் கருதிப் போற்ற வேண்டும்.

நபிமொழி :

ஒழுக்கம் அனைவருக்குமானாது. அது அனைத்து நலன்களும் தரும். ஆதலால், "உங்களில் சிறந்தவர் எனப்படுபவர் ஒழுக்கத்தில் சிறந்தவரே!” என்பதை நினைவில் நிறுத்துங்கள். அதைப் பேணுங்கள்.
அண்ணல் நபிகளார் (ஸல்) நூல் : புகாரி

மக்கட்பேறு

குறள் மொழி 56

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்.

குறள் எண் : 67

குறள் மொழியின் பொருள் :

தன் மகனைக் கற்றோர் சபையில் கல்வியிலும்,ஒழுக்கத்திலும் முதன்மை அடையுமாறு செய்தலே,ஒரு தந்தையானவர் தன் மகனுக்குச் செய்யும் நன்மையாகும்.

நபி மொழி :

ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்க முடியாது. அதுவே மிகச் சிறந்த நன்மையாகும்.
நபி பெருமானார் (ஸல்). ஆதாரம் நூல் : திர்மிதி 1952

(தொடரும்)


 


Post a Comment

0 Comments