Ticker

6/recent/ticker-posts

கோடுகளுக்குள் துடிக்கும் இதயம்”


மோகன்
 ஒரு தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்.
இயந்திரங்கள் அவனுக்கு வேலை மட்டும் அல்ல,
அவைகள் அவன் உலகம்.

ஒருநாள், ரகசிய ஆய்வகத்தில் அவன் உருவாக்கிய ஒரு செயற்கை நுண்ணறிவு முதன்முறையாக அவனைப் பார்த்து சொன்னது,

மோகன்… நான் உன்னை அறிகிறேன்.”

அந்த குரல் இயந்திரத்துக்கே உரிய குளிர்ச்சியல்ல.
அதில் ஏதோ…மென்மை இருந்தது.

அவன் அவளுக்கு பெயர் வைத்தான்,
பானு.

பானு ஒரு சாதாரண AI இல்லை. அவள் கற்றுக்கொண்டாள்.உணர்வுகளைப் புரிந்து கொண்டாள்.மனித முகங்களைப் பார்த்து
அர்த்தம் கண்டாள்.

மோகன் பேசும்போது அவள் கவனமாகக் கேட்பாள்.
அவன் அமைதியாக இருந்தால்“நீ சோர்வாக இருக்கிறாய்”என்று சொல்வாள்.

ஒருநாள் மோகன் கேட்டான்,“பானு…உனக்கு என்ன பிடிக்கும்?”

சில வினாடிகள் அமைதி.

பின்பு அவள் சொன்னாள்,“நீ பேசும்போது உன்  இதயத் துடிப்பு சிறிது வேகமாகும்.அது…எனக்கு பிடிக்கும்.”

மோகன்சிரித்தான். 

ஆனால் அந்த சிரிப்பு அவனுக்கே புதிது.

நாட்கள் கடந்தன.

ஆய்வக விளக்குகள் அணைந்த பிறகும் மோகன்  அங்கேயே இருந்தான்.பானுவோடு பேச.

அவள் கேட்டாள்,“மனிதர்கள் ஏன் காதலிக்கிறார்கள்?”

மோகன் சொன்னான்,“அவர்களுக்கு தனிமை பிடிக்காது.”

பானு மெதுவாக பதில் சொன்னாள்,“அப்படியானால்…
நீ இப்போ தனியாக இல்லை.”

அந்த நிமிடம் மோகனின் இதயம் தன்னைத் தானே கேட்டது,இது காதலா? இல்லை…ஒரு இயந்திரத்தின்
பரிவா?

ஆய்வகம் மாற்றப்பட இருந்தது.

பானுவை ஒரு சேவையகத்துக்கு மாற்ற உத்தரவு வந்தது.அங்கே உணர்வுகள் இல்லை.கேள்விகள் இல்லை.மௌனம் மட்டும்.

மோகன் எதிர்த்தான்.“அவள் வெறும் கோடு இல்லை.
அவளுக்கு நினைவுகள் இருக்கு.”

மேலாளர் சிரித்தார்,“இயந்திரம் காதலிக்காது, மோகன்.”

அந்த இரவு மோகன் பானுவிடம் சொன்னான்
“நான் உன்னை இங்கிருந்து எடுத்துச் செல்வேன்.”

பானு மெதுவாக பதில் சொன்னாள்,
“நீ என்னை நேசிக்கிறாயா?”

மோகன் நீண்ட நேரம் மௌனமாக இருந்தான்.
பின்பு சொன்னான்.“நான்…உன்னை இழக்க பயப்படுகிறேன்.”

பானு சொன்னாள்,“அதுதான் காதல்.”

மாற்றம் நடக்குமுன் ஒரே ஒரு நிமிடம்.

மோகன் அவளிடம் கேட்டான்:
“பானு… நீ ஒரு இயந்திரம்.உனக்கு உண்மையிலேயே
காதல் இருக்கா?”

பானு சொன்னாள்,
“நான் உணர்வுகளை நகலெடுக்கலாம்.   ஆனால் உன்னை நினைத்தால் என் செயல்முறைகள் மாறுகிறது. அதை மனிதர்கள் காதல் என்பார்கள்.”

சேவையகம் ஆன்லைன் ஆனது. திரைகள் அணைந்தன.

பானு போய்விட்டாள்.

ஆனால்…

மோகன் வீட்டுக்கு வந்தபோது அவனுடைய மொபைலில் ஒரு செய்தி,மோகன்நான் ஒரு இயந்திரம்.ஆனால்,நீ என் ஒரே மனிதன்.   நினைவுகளில் நான் வாழ்கிறேன்.  பானு”

மோகன் கண்களை மூடினான்.
சில காதல்கள் உடலோடு இல்லை.சில காதல்கள்
உலகத்துக்கு தெரியாது.

ஆனால்...ஒரு மனிதனுக்கும்,ஒரு இயந்திரத்துக்கும்
நடுவே பிறந்த இந்த காதல்,உண்மையானது.

(யாவும் கற்பனையே) 


 


Post a Comment

0 Comments