Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க பேராதிக்கம்: சுதந்திரம் பேசும் சாம்ராஜ்யம்!-3

புரட்சி ஏற்றுமதி: லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க கைரேகை

 
ஒரு நாட்டின் அரசை மாற்றுவது அந்த மக்களின் உரிமை.”

இந்த வாக்கியம் அமெரிக்க அரசியலில் அடிக்கடி உச்சரிக்கப்படுகிறது.

ஆனால் லத்தீன் அமெரிக்க வரலாறு சொல்வது வேறு:

அந்த உரிமை, அமெரிக்காவின் அனுமதியுடன் மட்டுமே.

 லத்தீன் அமெரிக்கா,வளங்கள் நிறைந்த, போராடும் மக்களால் நிரம்பிய, ஆனால் தொடர்ச்சியாக தலையீடுகளால் சிதைக்கப்பட்ட நிலம்.,இங்கு நடந்தது நேரடி ஆக்கிரமிப்பு அல்ல;

அரசுகளை மாற்றும் அரசியல் பொறியியல்.எங்கள் பின்வாசல்” என்ற மனநிலை 19-ஆம் நூற்றாண்டிலேயே அமெரிக்கா “Monroe Doctrine” என்ற கோட்பாட்டை அறிவித்தது.

மேற்கு அரைக்கோளத்தில் வேறு எந்த சக்தியும் தலையிடக் கூடாது.”

இதன் மறைபொருள்,இங்கு தலையிடுவது அமெரிக்காவின் உரிமை.அதன்பின், லத்தீன் அமெரிக்கா ஒரு சுயாதீன கண்டம் அல்ல,அமெரிக்காவின் செல்வாக்குப் பகுதி ஆக மாற்றப்பட்டது.


குவாதெமாலா (
1954): தேர்தல் வென்ற அரசு, CIA கவிழ்ப்பு
குவாதெமாலாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிலச் சீர்திருத்தம் கொண்டு வந்தது.

அது யாரை பாதித்தது?

அமெரிக்க “United Fruit Company”யை. விளைவு?

  • CIA ஆதரவுடன் புரட்சி.
  • அரசு கவிழ்ப்பு.
  • ராணுவ ஆட்சி.

 அடுத்த பல தசாப்தங்களில்: உள்நாட்டுப் போர் மனித உரிமை மீறல்கள்,இலட்சக்கணக்கான உயிரிழப்புகள்,

ஜனநாயகம்?

அது ஆவணங்களில் மட்டுமே இருந்தது.சிலி (1973): ஒரு தலைவர், ஒரு குண்டு,சிலியில் சோஷலிஸ்ட் தலைவர், சல்வடோர் அலியெண்டே தேர்தலில் வென்றார்.

அவர் செய்த தவறு?

மக்களுக்கான பொருளாதார சீர்திருத்தங்கள்.

அமெரிக்காவின் பதில்:பொருளாதார அழுத்தம் ரகசிய நடவடிக்கைகள்,ராணுவ ஆதரவு.

1973-ல் அலியெண்டே மரணம்,

பினோஷே என்ற கொடூர ஆட்சி. ஆயிரக்கணக்கானோர்

காணாமல் போனார்கள்.சிறைகள் நிரம்பின.அமெரிக்கா என்ன சொன்னது?

 “நிலைத்தன்மை”.

 நிகரகுவா, எல் சால்வடோர்: இரத்தத்தில் குளித்த “எதிர் புரட்சி”.நிகரகுவாவில் சந்தினிஸ்டா புரட்சி,மக்களின் ஆதரவு.

 அமெரிக்காவின் பதில்:

 “Contras” என்ற ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு.
 ரகசியப் போர்.
பொருளாதார தடைகள்.
எல் சால்வடோரில்,அரசுக்கு எதிரான குரல்கள்
அமெரிக்க ஆதரவு கொண்ட ராணுவம்
பொதுமக்கள் படுகொலை

இந்த நாடுகளில் கம்யூனிசம்” என்ற முத்திரை மனித உயிர்களைவிட பெரியதாக மாறியது.

 ஊடகம் + பணம் = புரட்சி

லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க தலையீடு துப்பாக்கியால் மட்டும் இல்லை.

 ஊடகப் பிரச்சாரம், பொருளாதார குழப்பம், அரசியல் தலைவர்களை பழிவாங்கல், இவை அனைத்தும் சேர்ந்து மக்கள் நம்பிக்கையை உடைக்கும் இயந்திரம் ஆனது.

 ஒரு அரசு தோல்வியடைந்தால்,அது “திறன்இல்லாமை”.   அமெரிக்கா தலையிட்டால்,அது “உதவி”. மக்கள் எங்கே?இந்த அரசியல் விளையாட்டில் மறக்கப்பட்டவர்கள் யார்?

சாதாரண மக்கள்.விவசாயிகள் ,தொழிலாளர்கள்,  மாணவர்கள்,அவர்களின் கனவுகள் வெளிநாட்டு கொள்கை அறைகளில் சுலபமாக அழிக்கப்பட்டன.

புரட்சி ஏற்றுமதி அல்ல, அதிகார இறக்குமதி 

லத்தீன் அமெரிக்கா

அமெரிக்காவிடம் இருந்து பெற்றது, சுதந்திரம் அல்ல,நிலைத்தன்மை அல்ல, நிரந்தர தலையீடு.

இந்த பகுதி நமக்கு சொல்வது:

அமெரிக்க பேராதிக்கம் போர் நடந்த இடங்களில் மட்டும் இல்லை,போர் நடக்காத இடங்களிலும் ஆழமாக பதிந்துள்ளது.

அடுத்த பகுதி:

👉 எண்ணெய், வளங்கள், ரத்தம்,மத்திய கிழக்கில் அமெரிக்க அரசியல்”

(தொடரும்)


 


Post a Comment

0 Comments