
உயிரென நினைத்தேனடி -நான்
உள்ளத்தைக் கொடுத்தேன்
உறவெனக் கண்டேனடி
உதிரத்தில் இணைத்தேன்.
உறங்கிட இதயத்த்திலே
உறைவிடமளித்தேனடி.
உணர்வுக்குள் விதையென
உணர்ச்சியால் ரசித்தேனடி.
உனக்கும் எனக்குமான
உதயமென மகிழ்ந்தேனடி.
உல்லாசமாக மலர்ந்தே
உதிரிப்பூவாய் இருந்தேனடி.
உசுப்பேத்தியவளே நீதானடி
உதறிக் கதறடிக்காயே ஏனடி.
உச்சரிப்பைத் துயராக்கி
உச்சத்திலே வலியை ஏற்றினாயடி.
உண்மைகள் கூறிடவோ நானடி
உணர்ந்திடுவாயோ என்னில் நீயடி .
உனக்கென மட்டும் வாழுமிதயமடி
உற்சாகமும் சோர்வும்
உன்னாலானதடி
உற்றுழியாக மாறாமலே
உற்றுத்தான் பாருமடி .
ஆர் எஸ் கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments