
அருளுடைமை
குறள் மொழி 57
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த 57. இன்னா உலகம் புகல்.
குறள் எண் : 243
குறள் மொழியின் பொருள் :
எல்லா உயிர்களிடத்திலும் கருணையுடன் நடந்து கொள்பவர்கள், இயற்கை பேரருளால் இருள் நிறைந்த துன்பம் எனும் நரகத்திற்குச் செல்ல மாட்டார்கள்.
நபிமொழி :
"யார் கருணையுடன் நடந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுகிறான். அவர்களுக்குத் துன்பமில்லை. பூமியில் வாழ்வோரிடம் நீங்கள் கருணை காட்டினால் வானில் இருப்பவன் (இறைவன்) உங்களிடம் கருணை காட்டுவான்.
நபி பெருமான் (ஸல்)
ஆதாரம் : சுனன் அபூதாவூத் (குர் ஆன் 41:34)
வினைத்தூய்மை
குறள் மொழி 58
58. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
குறள் எண் : 652
குறள் மொழியின் பொருள் :
நன்மையும், புகழையும் தராத பயனற்ற தீய செயல்களை ஒருவன் எப்போதும் செய்யாமல் விட்டு விடவேண்டும். அதுவே நன்மை தரும்.
நபிமொழி:
நன்மையின் பக்கம் அழைக்கக்கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே கண்டிப்பாக இருந்திட வேண்டும். அவர்களோ நல்லவை புரியும்படி ஏவ வேண்டும்; தீயவற்றிலிருந்து தடுத்தவண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இப்பணியைப் புரிகிறார்களோ உண்மையில் அவர்களே வெற்றியாளர் ஆவர்.
இறைவசனம் : திருக் குர்ஆன் - 3: 104
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments