Ticker

6/recent/ticker-posts

வழி மீது விழி வைத்து!

வசிகர வார்த்தையாலே
வசியம் வச்சவரே.
வயசுப் பொண்ண 
வளைச்சிப் போட்டவரே.
வரம்புக் காட்டுக்குள்ள 
வரம்பு மீறியவரே.
வக்கணையா ருசிக்க 
நோட்டம் போட்டவரே.
விளைஞ்சு போச்சு 
வெத்தலத் தோட்டமையா.
வரிசையிலே வருகிறது 
கரிசல் மண் புழுக்களய்யா.
வரஞ்சி விட்டேன் 
நெஞ்சத்திலே ஒன்னைய.
வழுக்கி நழுவி 
ஓடிக்கிறேன் நானுமையா.
வரன் கேட்டுக்க 
வருவாயோ சொல்லையா.
வழிமீது விழி 
வைத்திருக்கேன் நானையா.

ஆர் எஸ் கலா


 


Post a Comment

0 Comments