
தாய்லாந்தில் நடைபெற்று வரும் தண்ணீர் திருவிழாவின்போது சாலை விபத்துகளில் சிக்கி கடந்த 3 நாளில் 191 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டு மக்களின் புத்தாண்டு சோங்க்ரான் என்று அழைக்கப்படுகிறது. தாய் தேசிய புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 9-ம் தேதி கொண்டாடப்படுகிறது.
சோங்க்ரான் மத சடங்குகள், பாரம்பரிய நடனங்கள், இசை, விருந்துகளுடன் கொண்டாடப்படுகின்றன. சோங்க்ரான் நீர் திருவிழாவின்போது, பழையன கழித்து விட்டு, புதியதை வரவேற்கும் அடையாளமாக மக்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரைத் தெளித்துக் கொள்கிறார்கள்.
இந்நிலையில் இந்தத் திருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தத் தண்ணீர் திருவிழா கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்க வரும்போது 3 நாளில் சுமார் 951 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 191 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 911 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments