Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-25


பண்புடைமை

குறள் மொழி 65

நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றா ராதல் கடை.

குறள் எண் : 998

குறள் மொழியின் பொருள் :

நட்பு கொள்ளாமல், பகைமையைப் பாராட்டித் தீமை செய்பவர்களுக்கும். பண்பு காட்டி, நன்மை தரும் நல்லன செய்யாமல் போனால் அது நற்பண்பு உடையவர்களுக்குத் தீமையுடன் இழிவைத் தரும்.

நபிமொழி

நன்மையும் தீமையும்..
''.நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்து கொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்.

நபிகள் நாயகம் (ஸல்)-ஆதாரம்:முஸ்லிம்

நிலையாமை

குறள் மொழி 66

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும்.

குறள் எண் :335

குறள் மொழியின் பொருள் :

மரணம் நிச்சயமானது; வாய் பேச முடியாமல் நாக்கு குழறி, இறுதி விக்கல் எழுந்து, உடலை விட்டு உயிர் பிரிந்து போவதற்கு முன்னர் நல்ல செயல்களை விரைந்து செய்திடல் வேண்டும்.

நபிமொழி

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுகித்தே ஆதல் வேண்டும். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல அற்ப இன்பப் பொருளன்றி வேறில்லை. ஆதலின் வாழும் காலத்திலேயே விரைந்து அறம் செய்.
இறைவசனம், திருக் குர்ஆன் :3-185

(தொடரும்)

 


Post a Comment

0 Comments