Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-28


நடுவு நிலைமை

குறள் மொழி 71

சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

குறள் எண் : 118

குறள் மொழியின் பொருள் :

சமமாக நின்று தன்னிடத்தில் தராசு முள் வைக்கப்பட்டுள்ள பொருளின் அளவைக் காட்டுவதுபோல, நடுவுநிலைமையில் இருந்து தவறாமல் இருப்பதே நல்லவர்க்கு அழகு.

நபிமொழி :

விற்கும் பொழுதும் "வாங்கும் பொழுதும், வழக்குரைக்கும் பொழுதும் எந்த சூழலிலும் பெருந்தன்மையாக, நடுவுநிலை தவறாமல் நடந்து கொள்ளும் மனிதருக்கு இறைவன் அருள் புரிவானாக”! என்று அல்லாஹ்வின் தூதர் நபிபெருமானார் கூறினார்கள்.
- ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),ஆதாரம்:நூல் புகாரி- 2076

வாய்மை

குறள் மொழி 72

தன்நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

குறள் எண் : 293

குறள் மொழியின் பொருள் :

தன்மனம் அறிந்து பொய்பேசுதலோ, பொய்ச் சத்தியம் செய்தலோ கூடாது. அவ்வாறு பொய் உரைத்தால் பின்னர் தன்மனமே தன்னை வருத்தும்.
குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்-

நபிமொழி:

"பொய் உரைத்தல் மூலம் செய்யும் பொய் சத்தியம், சரக்கைச் சுலபமாக விற்பனை செய்ய உதவும். ஆனால் இறைவனின் பரக்கத் எனும் அருள்வளத்தை அழித்துவிடும்”. "தன் மனமறிய பொய்யுரைத்தல் பாவமாகும்" என்று அண்ணல் நபி பெருமானார் அவர்கள் கூறினார்கள்.
- அபூஹிரைரா (ரலி), ஆதாரம் : நூல் : புகாரி 2087.

(தொடரும்)


 


Post a Comment

1 Comments

  1. அருமையான பதிவு உங்களுடைய அறப்பணி சிறக்கட்டும்...மனமார்ந்த வாழ்த்துக்கள்...
    அன்புடன் குறள்யோகி, தமிழ்ச்செம்மல் முனைவர் மு.க.அன்வர்பாட்ஷா, தமிழ்நாடு, இந்தியா.

    ReplyDelete