Ticker

6/recent/ticker-posts

அனைத்து பதவிகளையும் பறித்த எடப்பாடி- அதிமுகவில் பரபரப்பு


சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்ற மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்த முதல்வர் விஜயின் தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டின் 17வது சட்டமன்றத்தின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று (13-05-26) காலை 9:30 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டு வந்தார்.

தொடர்ந்து, சட்டமன்றத்தில் 6 பகுதிகள் உள்ள நிலையில் டிவிஷன் முறையில் வாக்கெடுப்பு நடந்தது. அந்த வாக்கெடுப்பில் தவெக அரசு தொடர்வதற்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்களும், எதிர்த்து 22 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பில் நடுநிலையாக 5 எம்.எல்.ஏக்களும், பங்கேற்காதோர் 60 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். தவெக அரசு தொடர்வதற்கு பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்ற நிலையில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 எம்.எல்.ஏக்கள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் முதல்வர் விஜய்யின் தவெக அரசு இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றது.

அதிமுகவின் நிலைப்பாட்டிற்கு எதிராக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்துள்ள நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தி வந்தார். அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.முனுசாமி, வழக்கறிஞர் இன்பதுரை உள்ளிட்டவர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். இந்நிலையில் தவெக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வாக்களித்த சி.வி.சண்முகம் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.பி.அன்பழகன், பெஞ்சமின், ஜக்கையன், ராதாகிருஷ்ணன், இசக்கி சுப்பையா, எம்.சி.சம்பத் உள்ளிட்ட தவெக கட்சிக்கு ஆதரவளித்து வாக்களித்து அனைவரது கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல் 17 புதிய பொறுப்பாளர்களையும் எடப்பாடி அறிவித்துள்ளார்.

nakkheeran


 


Post a Comment

0 Comments