
கத்தாரின் எரிவாயு ஆலையில் நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கத்தாரின் ராஸ்லஃபான் தொழிற்போட்டையில் எரிவாயு ஆலை அமைந்துள்ளது. ஈரான் தாக்குதலால் சேதம் அடைந்த இந்த ஆலை, அசாதாரண சூழல் காரணமாக செயல்படாமல் இருந்தது. தற்போது ஈரான் - அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, ஆலை மீண்டும் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், இந்த ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது, தீ மளமளவென பரவியதில், அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 66 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனை கத்தார் எரிசக்தி துறை அமைச்சர் சாத் அல் காஃபி உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உடல்களை இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments