Ticker

6/recent/ticker-posts

அசத்தல் சுவையில் சிக்கன் தொக்கு... இப்படி ஒரு முறை செய்து பாருங்க


பொதுவாக ஞாயிற்று கிழமைகளில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏதாவது ஒரு அசைவ உணவு இடம் பெற்றிருக்கும். அதில் முக்கியமான ஒன்று சிக்கன்.

சிக்கனை குழம்பு, வறுவல், சிக்கன் 65, பிரியாணி என வகை வகையாக செய்து சாப்பிடுவது வழக்கம். அதுவும் சிக்கன் உணவுகள் காரசாரமாக இருந்தால் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 

அந்த வகையில் இன்று அட்டகாசமான சுவையில் சற்று வித்தியாசமாக சிக்கன் தொக்கு எப்படி எளிமையான முறையில்  செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை

 சிக்கன் - 1/2 கிலோ கிராம்

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1மேசைக்கரண்டி 

மல்லித் தூள் - 2 மேசைக்கரண்டி 

தயிர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு 

தொக்கு செய்வதற்கு
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி 

ஏலக்காய் - 2 

கிராம்பு - 3 

பிரியாணி இலை - 1 

சோம்பு - 1தே.கரண்டி 

சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)

 இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 மேசைக்கரண்டி 

தக்காளி - 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1/2 தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

மல்லித் தூள் - 1 மேசைக்கரண்டி

தண்ணீர் - 3/4 கப்

மிளகு - 1/2 தே.கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு 

செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் கழுவி துண்டுகளக வெட்டி ஒரு பதத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், தயிர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி 20 நிமிடங்கள் வரையில் ஊற வைத்து வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்நிறமாக மாறும் வரையில் வதக்கி பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

பின்னர் நறுக்கிய தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி, ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 5 தொடக்கம் 7 நிமிடங்களுக்கு நன்றாக கிளறி விட வேண்டும்.

பின்னர் தொக்கு சற்று கெட்டியாக இருப்பற்காக, அதில் 3/4 கப் நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, மூடி வைத்து, 10 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வேகவிட வேண்டும். 

பின்பு மூடியைத் திறந்தால் எண்ணெய் பிரிந்து வந்திருக்கும்  இப்போது அதில் மிளகுத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் தொக்கு தயார். 

இந்த சிக்கன் தொக்கு இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

manithan


 



Post a Comment

0 Comments