
குறள் 206:
தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால தன்னை அடல்வேண்டா தான்.
தீச்செயல் தன்னை வருத்துமென்றால் அச்செயலை மாற்றார்க்கும் செய்தல் தவிர்.
குறள் 207:
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென் றடும்.
கணைபோன்ற நேர்ப்பகைக்குத் தப்பலாம்! தீய வினைப்பகைக்குத் தண்டனை உண்டு.
குறள் 208:
தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை வீயா தடியுறைந் தற்று.
தீமைசெய்தல், ஒட்டி இருக்கும் நிழல்போல தீயோரை ஒட்டிநிற்கும் தீங்கு.
குறள் 209:
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந் துன்னற்க தீவினைப் பால்.
தன்வாழ்வை வாழ நினைப்பவன் தீயசெயல் தன்னை விரும்பமாட்டான் செப்பு.
குறள் 210:
அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின்.
முரடன்தான்! கேடுசெய்ய வில்லையென்றால் தீமை நெருங்கா தவர்க்கென்றே நம்பு
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments