
அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ் இனி கொடுப்பனவுகள் வறிய மற்றும் மிகவும் வறிய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு அஸ்வெசும நலன்புரித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2023 ஆம் ஆண்டில் சுமார் 16 இலட்சம் பயனாளிகள் நான்கு பிரிவுகளின் கீழ் அஸ்வெசும கொடுப்பனவுகளைப் பெற்றனர். அவற்றில் நான்காவது பிரிவான இடைநிலை (Transitional) பிரிவைச் சேர்ந்த 3 இலட்சத்து 15 ஆயிரம் பேருக்கான கொடுப்பனவுகள் 2025 ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்டன.
மேலும், மூன்றாவது பிரிவான பாதிக்கப்படக்கூடிய (Vulnerable) பிரிவில் உள்ள 4 இலட்சத்து 25 ஆயிரம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரு பிரிவுகளிலும் உள்ள குடும்பங்களில் உண்மையில் வறுமை அல்லது தீவிர வறுமை நிலையில் உள்ளவர்கள் இருந்தால், அவர்கள் மீண்டும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயன்களைப் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷன தெரிவித்துள்ளார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments