Ticker

6/recent/ticker-posts

உள்ளத்தைக் கொன்று விட்டாய்!


நத்தை போல் 
வார்த்தைகளால் ஊர்ந்வளே.
மெத்தை வரை 
அன்பை வளர்த்தவளே.

குறும்பாய்ச் சுவையோடு வம்பளர்ந்தவளே.
அரும்பிடும் ஆசையை 
தூண்டியாய்  இழுத்தவளே.

கொத்தோடு மலர்களைக் 
கையினில் கொடுத்தவளே.
கண்ணாலே மயக்கி 
முன்னாலும் பின்னாலும் அலைந்தவளே.
மத்தாப்பு பேச்சினாலே 
நெஞ்சத்தை அணைத்தவளே .

சிந்தனையில் 
உன்னை  நுழைத்து
பத்தாம் வகுப்புப் பாடத்தை 
சுத்தமாய் அழித்து 
சின்னப் பையன்
எண்ணத்தை உனதாக்கியவளே. 

அத்தனையும் இப்போது 
என்னாச்சு சின்னவளே.
இன்னொருத்தனோடு 
கொடுக்காயே நெருக்கமான 
காட்சி  ஏனடி கொடியவளே. 

உணர்வைக் கெடுத்து  
உயிரை எரித்தவளே 
உள்ளத்தைக் கொன்று
விட்டாயெடி உமயவளே.  

ஆர் .எஸ் . கலா


 


Post a Comment

0 Comments