Ticker

6/recent/ticker-posts

போர் நிறுத்தம் குறித்து கவலை இல்லாமல் தொடர்ந்து தாக்கி வரும் இஸ்ரேல்: ஹிஸ்புல்லா போராளிகள் கடும் கண்டனம்


தென் லெபனானிலிருந்து இஸ்ரேல் தனது துருப்புகளை மீட்டுக்கொள்ள திட்டம் வகுக்கவேண்டும் என்று ஹிஸ்புல்லா போராளிகள் குழு தலைவர் நயிம் காசிம் (Naim Qassem) கேட்டுக்கொண்டுள்ளார்.

திட்டமிட்டப்படி அது நடக்கவேண்டும் என்றார் அவர்.

தென் லெபனானில் இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூடு, சண்டைநிறுத்தத்தை மீறிய செயல் என்று குழு கூறியிருக்கிறது.

இருதரப்பும் வெள்ளிக்கிழமை சண்டைநிறுத்தம் செய்துகொண்டன.

பொதுமக்கள்மீது இஸ்ரேல் நடத்திய துப்பாக்கிச்சூட்டை ஹிஸ்புல்லா சாடியது. துப்பாக்கிச்சூட்டில் இருவர் மாண்டனர்.மேலும் சிலர் காயமுற்றனர்.

ஆனால் போர் ஒப்பந்தம் குறித்து எந்தவித கவலையும் இல்லாமல் இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி வருகிறது என்று ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

nambikkai


 


Post a Comment

0 Comments