
மொனராகலை, பிபிலை பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவி மீது பெற்றோல் ஊற்றித் தீயிட்டுக் கொலை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், பெண்ணின் கணவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று முன்தினம்(21.06.2026) இடம்பெற்றுள்ளது.
இந்தக் கோரச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் அதே இடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகொலையானவர் 40 வயதுடைய பெண் எனவும், அவர் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் அப்பகுதியில் கோழி இறைச்சி விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.
மனைவிக்குத் தீயிட்ட சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் கால்களிலும் எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலவி வந்த கடுமையான குடும்பத் தகராறு காரணமாகவே இந்தத் துரதிர்ஷ்டவசமான படுகொலை அரங்கேறியிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கொடூர சம்பவம் குறித்து பிபிலை பொலிஸார், தடய அறிவியல் அதிகாரிகளுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
tamilwin

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments