
ரணில் விக்ரமசிங்கவின் மருமகனான ருவன் விஜேவர்தனவுக்கு சொந்தமான விஜய பத்திரிகை நிறுவனத்தால் வெளியிடப்படும் “டெய்லி மிரர்” நாளிதழ், இலங்கை கிரிக்கெட்டை பாதிக்கும் வகையில் முற்றிலும் தவறான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக விளையாட்டு விமர்சகர்கள் தெரிவிக்கையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோரின் பெயர்களை பயன்படுத்தி இலங்கை கிரிக்கெட்டை அவமதிக்கும் வகையிலான பிரசாரம் முன்னெடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனர்.
கிரிக்கெட் மாற்றுக் குழுவின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டை மீளக் கட்டியெழுப்பும் முயற்சிகளை ஏற்க முடியாத சில தரப்புகள் இத்தகைய தவறான தகவல்களுக்கு பின்னால் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“டெய்லி மிரர்“ வெளியிட்ட செய்தியில், இலங்கை அரசாங்கம் கிரிக்கெட் நிர்வாகத்தில் முறையற்ற தலையீடு செய்கிறது என ஐசிசி தலைவர் குற்றம்சாட்டியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், அது உண்மையல்ல என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், இருதரப்பினரும் நடத்திய சந்திப்பு நட்புறவானதும் பயனுள்ளதுமாக இருந்ததாக கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments