
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மகனும் சட்டத்தரணியுமான ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை அமைதியாக இருந்த அக்கட்சியின் மாத்தறை மாவட்ட முன்னாள் வேட்பாளரான புத்திக பத்திரண, நேற்று (25) திடீரென ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, பொதுமக்களின் அனுதாபத்தைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அந்த ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட புத்திக பத்திரண, சரித் அபேசிங்க கைது செய்யப்பட்டபோது, அவரது மூன்று குழந்தைகளின் மனநிலையும் பாதிக்கப்படும் வகையில் பொலிஸ் அதிகாரிகள் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
lankatruth

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments