Ticker

6/recent/ticker-posts

கண் விழித்தார்...'I love you" சொன்னார்


சுறா தாக்கிப் படுகாயமடைந்த ஆஸ்திரேலியப் பெண் கோமாவிலிருந்து மீண்டு கண் விழித்துள்ளார்.

கண் திறந்ததும் குடும்பத்தாரைப் பார்த்து அவர் "I love you"சொன்னார்.

லியா ஸ்டீவர்ட் (Leah Stewart) எனும் அந்த 34 வயதுப் பெண்ணைக் கடந்த ஜூன் 13ஆம் தேதி சுறா தாக்கியது.

சிட்னியில் உள்ள கடற்கரையில் சம்பவம் நடந்தது.

லியாவின் ஒரு கை அகற்றப்பட்டது.

கடந்த ஒருவாரத்தில் அவருக்குப் பல அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

அவருக்கு உயிர்காக்கும் சிகிச்சையும் வழங்கப்படுகிறது.

மருத்துவர்கள் மருந்தின் அளவைக் குறைத்தனர்.

அப்போது கண் விழித்த அவர் குடும்பத்தாரிடம் பேசினார்.

வரும் வாரங்களிலும் அவருக்குச் சிகிச்சை தொடரும்.

ஆஸ்திரேலியாவில் அண்மைக்காலமாக சுறா தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

கடல் நீரின் வெப்பநிலை உயர்வதும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

seithi


 


Post a Comment

0 Comments