Ticker

6/recent/ticker-posts

110 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைனுடன் வெளிநாட்டவர் கைது!


சுமார் 110 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருள் தொகுதியுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் 79 வயதான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த விவசாயப் பொறியியலாளர் எனவும், குறித்த சந்தேகநபர் கடந்த 22 ஆம் திகதி சியரா லியோனில் இருந்து அடிஸ் அபாபா மற்றும் தோஹா ஊடாக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது அவரது பயணப் பையை சுங்க அதிகாரிகள் பரிசோதித்த போதிலும், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால் அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும், தாமதமாக வந்த அவரது மற்றொரு பயணப் பையைப் பரிசோதித்தபோதில், இரண்டு கோப்பு உறைக்குள் (File covers) மிக சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு கொக்கைன் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அப்பொருட்களைப் பெற வந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கொக்கைன் போதைப்பொருளின் மொத்த நிறை 02 கிலோகிராம் 198 கிராம்கள் என்பதுடன், இதன் சந்தைப் பெறுமதி சுமார் 109.9 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட கொக்கைன் தொகுதியும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

lankatruth


 


Post a Comment

0 Comments