
புதியதொரு பொறுப்பு தனக்கு வந்துள்ளதை புதுத்தொல்லையாக செரோக்கி நினைக்காமல், தனது சமூகத்தின் மேம்பாட்டை நினைத்து அவன் தன்னை ஆறுதல் படுத்திக்கொண்டவனாக, இது விடயமாக கிராமத்திலுள்ள மூத்த குடியினர்களை ஒவ்வொருவராக அணுகலானான்!
காலாகாலமாக அன்னியர் வருகையைத் தமது பிரதேசத்துக்குள் நெருங்க விடாமல் தடுத்து வந்த இம்மக்கள், இப்புதிய திட்டத்தை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் என்பதை செரோக்கி நன்கு அறிவான்.
அவர்கள் விரும்பாமைக்குப் பல காரணங்களை செரோக்கியிடத்தில் எடுத்துக் கூறியபோதிலும், அவன் அவர்களை திருப்திப்படுத்த முன்வைத்த ஒரே விடயம், 'ஒதுங்கி வாழ்ந்துவரும் எமது சமூகம் உலகத்தாருடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கிய நிலையில் துன்பங்களையும், துயரங்களையும் காலாகாலமாக அனுபவித்து வருகின்றது; அதற்கொரு விடிவுகாலம் பிறக்க வேண்டும். இந்நிலை நீடிக்கப் படாதிருப் பதற்காக நமது சமூகம் அறிவூட்டப்பட வேண்டும். வனத்தையே தஞ்ச மெனக் கருதி வாழும் நமது சமூகத்தின் எதிர்காலச் சந்ததியினர், வெளியுலகத்தாருடன் ஒன்றுபட்டுவாழ வேண்டிய பொற்காலம் தற்போது நம் கண்முன் வந்துள்ளது; இதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்' என்பதாகும்.
இதனை அவன் மூத்தவர்களிடம் பல்வேறு கோணங் களிலும் விளக்கிக் கூறியதை ஏற்றுக்கொண்ட அவர்கள் ஓர் இணக்கப்பாட்டிற்கு வந்தனர்.
கிராமத்தின், நகர எல்லையில் கொட்டில் அமைத்து “கல்விப்பயணம்” தொடர அவர்கள் சரிகண்டதை செரோக்கி நற்செய்தியாக இர்வின் மூலம் தூதுக்ககுழுவுக்குத் தெரிவித்துவிட்டு, அவர்களது தொடக்க நகர்வை எதிர்பார்த்துக் காத்திருந்தான்!
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments