
குறள் 216:
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கண் படின்.
கருணைமனங் கொண்டவரின் செல்வம் பழுத்த மரமொன்று ஊர்நடுவே போல்.
குறள் 217:
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின்.
பெருந்தன்மை யாளனின் செல்வம் மருந்து மரம்போல் பயன்படும் சொல்.
குறன் 218:
இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர்.
உதவ முடியாத போதும் உதவத் தயங்கமாட்டார் ஏழைக்குத் தான்.
குறள் 219:
நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர செய்யா தமைகலா வாறு.
உதவ முடியவில்லை என்றே வருந்தும் மனமுடையோன் ஏழ்மை நிலை.
குறள் 220:
ஒப்புரவி னால்வருங் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து.
ஒப்புரவால் கேடுவரும் என்றால் தனைவிற்றும் அக்கேட்டை வாங்குதல் நன்று.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments