
தென் கொரியாவில் வணிக வளாகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கும் மேலாக எரியும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
தலைநகர் சியோல் அடுத்த கெளபாங் பகுதியில் உள்ள இ காமர்ஸ் வணிக வளாக கட்டடத்தின் 6ஆவது மாடியில் கடந்த சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது.
தீ மெல்ல மெல்ல கட்டடம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய நிலையில், தகவல் அறிந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இருப்பினும், தீயை அணைக்க வீரர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. 2 நாட்களுக்கும் மேலாக தீ கொளுந்து விட்டு எரிவதால் வீரர்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.
கட்டடத்தில் பணியாற்றிய ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட நிலையில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments