
ஈரோடு மாவட்டம், பவானி அருகே, பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்த பாட்டியை காவலர்கள் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் ஒரு தனியார் மருத்துவமனையில் பிறந்த ஒரு பெண் குழந்தையை அவரின் சொந்த பாட்டியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிறந்து 14 மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு பாட்டி நடத்திய கொடூரம் | Grandmother S Cruel Act Against Newborn Girl
மது போதைக்கு அடிமை
குழந்தையின் கழுத்து மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது.
பொலிசார் விசாரணையில் அந்த குழந்தையை சொந்த பாட்டியான தங்கமணி(47) கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. கொலைக்கான காரணம் பற்றி பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
தனது மகளுக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை இருந்த நிலையில் மருமகன் மது போதைக்கு அடிமையாகி குடும்பத்தை கவனிக்காமல் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முறையும் பெண் குழந்தை பிறந்ததால், இரண்டு பெண் குழந்தைகளை வளர்க்க முடியாது எனக் கருதி, குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, பேத்தியைக் கொலை செய்ததாக தங்கமணியை பவானி காவலர்கள் கைது செய்தனர்.
jvpnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments