
அடுத்த சில நாட்கள் அவள் பேசாத மௌனமே அவனுக்கு பழக்கமாகி விட்டது…
காலை வந்தால் அவள் வீட்டு வாசலை ஒருமுறை பார்த்தே அவன் வேலைக்குப் போவான்…
மாலை வந்தால் அந்த ஜன்னலருகே அவள் நின்றிருக்கிறாளா என்று தேடுவான்.
…
ஒரு நாள் மட்டும் அந்த ஜன்னல் திறக்கவில்லை…
மழை பெய்தது.காற்று வீசியது,ஆனால் அவள் இல்லை.அவனது மனம் பதறியது…அடுத்த வீட்டு பாட்டியிடம் அவன் கேட்டான்…
“அவளுக்கு உடம்பு சரியில்லைப்பா நேத்து இரவெல்லாம் காய்ச்சல்…”என்றார் பாட்டி,அந்த ஒரு நொடி அவனது இதயம் ஏதோ நெருங்கிய உயிரை இழக்கப் போவது போல பயந்தது…
அந்த இரவே மருந்தும் கஞ்சியும் வாங்கி அவள் வீட்டின் வாசலில் அமைதியாக வைத்துவிட்டு திரும்பிச் சென்றான்…கதவு சிறிது திறந்தது…
உள்ளிருந்து அவள் விழிகள் மட்டும் அவனைப் பார்த்தன…
அந்த பார்வையில் முதல் முறையாக “நன்றி…”என்ற வார்த்தை இருந்தது…பேசாத பெண்ணின் மௌன இதயத்தில் மெல்ல மெல்ல காதல் முளைக்கத் தொடங்கியது…
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments