Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-33


புல்லறிவாண்மை

குறள் மொழி 82

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

குறள் எண் :845

குறள் மொழியின் பொருள் :

அறிவில்லாதவர்கள் தான் கற்றறியாத நூல்களைக் கற்றறிந்தவன் போலக் காட்டிக் கொண்டு பொய்யுரைத்தால், அவன் கற்றுணர்ந்த நூல்களைப் பற்றிக் கூறும்போது கூட அவன் மீது சந்தேகம் உண்டாக்கி விடும்.

நபி மொழி:

அல்லாஹ் (இறைவன்) கூறுகிறான்:
போல நீங்கள் அறியாதவற்றை அறிந்ததைப் பொய்யாகக் கூறுவதையும் (அல்லாஹ்) இறைவன் தடை செய்துள்ளான் அது நெறிமுறை அல்ல. முரணாகும்.

இறைவசனம் : திருக் குர்ஆன் 21: 7

மெய்யுணர்தல்

குறள் மொழி 83

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு.

குறள் எண்:358

குறள் மொழியின் பொருள்:

பிறவிக்குக் காரணமாகிய அறியாமை நீங்கும் வகையில் முக்திக்குக் காரணமாகிய இறையாற்றலின் உண்மைப் பொருளைக் காண்பதே உண்மையான அறிவாகும்.

நபிமொழி

ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை இயற்கைப் பேராற்றல் ஆகிய இறைவன் (அல்லாஹ்) அறியாமல் இருப்பதில்லை அந்த உண்மையை அறிவதே உண்மையான அறிவாகும்.

நபி பெருமானார் இறைவசனம்,
சான்று திருக் குர்ஆன் 6:59.

(தொடரும்)


 


Post a Comment

0 Comments