மழை பெய்யும் மாலை நேரம்.
கல்லூரி நூலகத்தின் பின்னால் இருந்த பழைய மரத்தடியில் அவள் மீண்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.
கையில் அதே குறிப்பேடு.
ஆனால் இன்று…
அவள் எழுதவில்லை.அவன் மெதுவாக
அருகில் வந்து நின்றான்.
“உன் கவிதை…
நேற்று முழு இரவும் என்ன தூங்க விடவில்லை…”
அவள் தலை நீட்டிப் பார்த்தாள்.
அந்த கண்களில் பயமா?,இல்லை…
முதன் முறையாக நம்பிக்கை இருந்தது.
அவன் அவளருகில் அமர்ந்தான்.
சில நொடிகள் இருவருக்கும் மௌனம்.
ஆனால் அந்த மௌனமே ஆயிரம் வார்த்தைகளை பேசிக்கொண்டிருந்தது.
திடீரென்று காற்று வீசியது.அவள் கூந்தல் அவன்
முகத்தைத் தொட்டது.அவன் மெதுவாகச் சிரித்தான்.
“பேச முடியாதது
உன் உதடுகள் தான்…
ஆனா உன் கண்கள்
என்னை முழுக்க வாசித்து விட்டது
அந்த ஒரு வரி கேட்டவுடன் அவள் விரல்கள் நடுங்கியது.
குறிப்பேட்டை திறந்து அவள் மெதுவாக எழுதினாள்:
“என்னைப் பார்த்து பயப்படாத முதல் மனிதர் நீங்க…”
அவன் அந்த வரியைப் பார்த்தான்.
பிறகு…
மெதுவாக அவள் கையில் இருந்த பேனாவைப் பிடித்தான்.அவளின் இதயம் வேகமாகத் துடித்தது.
மழைத்துளி இருவரின் கைகளிலும் விழுந்தது.
அந்த நொடி ,அவள் மௌனம் காதலாக மாறத் தொடங்கியது.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






1 Comments
நன்றி அண்ணா
ReplyDelete