Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் புளோரிடா மாநில விமான நிலையம் ஒன்றுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.


இதற்கு முன் அது பால்ம் பீச் அனைத்துலக விமான நிலையம் என்று அழைக்கப்பட்டது.

விமான நிலையம் விரைவில் உலகின் மிகப் பிரமாண்டமான, தலைசிறந்த விமான நிலையமாகத் திகழுமென அதிபர் டிரம்ப் அவரது Truth Social பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவரது புகழ்பெற்ற Mar-a-Lago விடுமுறைத் தலம் அந்த விமான நிலையத்துக்கு வெகு அருகில் உள்ளது.

தந்தையின் பெயர் சூட்டப்பட்ட விமான நிலையத்தில் தரையிறங்கினார் அதிபர் டிரம்ப்பின் மகன் எரிக்.

பால்ம் பீச் மட்டுமல்ல புளோரிடா என்றாலே அது தமது தந்தை டோனல்ட் டிரம்ப் தான் என்றார் அவர்.

உயிருடன் இருக்கும் பிரமுகர்களை, குறிப்பாக ஆட்சியில் உள்ள அதிபர்களைப் பண நோட்டுகளிலும் கட்டடங்களிலும் கொண்டாடுவதை அமெரிக்கா இதுவரை தவிர்த்து வந்துள்ளது.

ஆனால் இப்போது அது மாறுகிறது.

ஏற்கனவே தேசியப் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டுகளில் அதிபர் டிரம்ப்பின் முகம் அச்சிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டின் பிற்பாதியில் அவர் கையொப்பமிட்ட பணநோட்டுகள் புழக்கத்துக்கு வரவிருப்பதாய் அமெரிக்க நிதியமைச்சு கூறியுள்ளது.

seithi


 


Post a Comment

0 Comments