
முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் மூலமாக வைபவ் சூர்யவன்ஷி சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்திருக்கிறார்.
இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி ஹராரேவில் நடைபெற்ற நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், சிவம் துபே, ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் அபிஷேக் சர்மா ஒரு ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன் இருவரும் பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்க விட்டனர்.
அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி, 4 பவுண்டரி, 4 சிக்ஸர் உடன் அரை சதம் விளாசி அவுட்டானார். ஷ்ரேயஸ் அய்யர், இஷான் கிஷன் ஜோடி 46 ரன்கள் சேர்த்த நிலையில், இஷான் கிஷன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ஷ்ரேயஸ் அய்யர் 28 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். முடிவில் 13.2 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் வகிக்கிறது.
இந்தப் போட்டியின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த உலகின் மிக இளம் வீரர் என்ற பெருமையை வைபவ் சூர்யவன்ஷி பெற்று சரித்திரத்தில் இடம்பிடித்தார். 15 வயது மற்றும் 118 நாட்கள் ஆன வைபவ், இதற்கு முன் நேபாள பேட்ஸ்மேன் குஷல் மல்லா படைத்த சாதனையை முறியடித்துள்ளார். 2020 பிப்ரவரி 8 அன்று கீர்த்திபூரில் அமெரிக்காவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மல்லா அரைசதம் 51 பந்துகளில் 50 ரன்கள் அடித்தபோது அவருக்கு 15 வயது மற்றும் 340 நாட்கள் ஆகியிருந்தது. தற்போது அதனை வைபவ் சூர்யவன்ஷி
சூர்யவன்ஷிக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த முந்தைய இளம் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர். 1989 நவம்பரில் பைசலாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் 59 ரன்கள் எடுத்தபோது டெண்டுல்கருக்கு 16 வயது மற்றும் 213 நாட்கள் ஆகியிருந்தது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments