Ticker

6/recent/ticker-posts

முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோன் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்கள்!


நீதிமன்றத்தின் சுயாதீனமான செயற்பாட்டை முடக்கி, சரியான முறையில் நீதியை நிலைநாட்டுவததைத் தடுப்பதற்காக ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலம் முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த அரசியல் நடவடிக்கைகள் குறித்து முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோன் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார்.

இந்த வெளிப்படுத்தல்கள் காரணமாக, அன்றைய பிரதமர் ரணசிங்க பிரேமதாசவினால் அவருக்கு எதிராக பதவிநீக்கப் பிரேரணை (දෝශාභියෝග යෝජනාව) கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பிரதம நீதியரசர் பதவியின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில் நெவில் சமரகோன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்னர், பாடசாலை ஒன்றில் நிகழ்த்திய உரையினை அடிப்படையாகக் கொண்டு ‘லங்காதீப’ இணையதளத்தில் (2025 ஜனவரி 15 அன்று) வெளியிடப்பட்ட செய்தியின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

lankatruth


 


Post a Comment

0 Comments