Ticker

6/recent/ticker-posts

ராஜபக்ச ஆட்சிக்கால பிணையப்பத்திர வெளியீடுகள் தொடர்பான ரணிலின் குற்றச்சாட்டுகள் மீண்டும் கவனம்…


மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆட்சிக் காலமான 2008–2014 காலப்பகுதியில், 84 சந்தர்ப்பங்களில் தனியார் நேரடி ஒதுக்கீட்டு முறையின் கீழ் 4,702 பில்லியன் ரூபா பெறுமதியான அரசுப் பிணையப்பத்திரங்கள் வெளியிடப்பட்டதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2017 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அந்தக் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட மொத்த 5,147 பில்லியன் ரூபா பெறுமதியான பிணையப்பத்திரங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை வெளிப்படைத்தன்மையற்ற தனியார் நேரடி ஒதுக்கீட்டு முறையில் வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், ஜனாதிபதி பிணையப்பத்திர ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவடைந்த பின்னர், 2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பிணையப்பத்திர முறைகேடுகள், பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் பெறப்பட்ட கடன்கள் மற்றும் பங்குச் சந்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்தும் ஆராய நடவடிக்கை எடுக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

lankatruth

 


Post a Comment

0 Comments