Ticker

6/recent/ticker-posts

இன்னொரு பள்ளத்தாக்கு !

ஏணிகளை வைத்து 
பள்ளங்களிலிருந்து 
ஏறி வந்துள்ளீர்கள்.

இந்த ஏணியைப் பெற 
எத்தனை போராட்டம் 
என்பதெல்லாம் 
அவசியமற்றுப் போனது.

இனி அவர் பறக்க 
விமானம் தருவார் என 
முழுமையாக நம்புகிறீர்கள்.

ஹெலிகாப்டரில் 
பறக்கும் அவரை 
அண்ணாந்து பார்த்துக் கொண்டு 
ஓடுகிறீர்கள்

இன்னும் சற்று தூரத்தில் 
இன்னொரு பள்ளத்தாக்கு 
இருப்பதை உணராமல்.

ராஜ்குமார் முத்துவீரன்

 


Post a Comment

0 Comments