Ticker

6/recent/ticker-posts

லாரியில் தப்பிய டிரம்ப்.. ஊடகங்கள் கண்ணெதிரே 'ஹாலிவுட்' பாணியில் திக்.. திக்... ஆபரேஷன்!

"ஈரானிடமிருந்து வந்த அச்சுறுத்தலைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வழக்கமான 'Air Force One' விமானத்தை விட்டுவிட்டு, ஒரு சாப்பாட்டு லாரி மற்றும் சிறிய ராணுவ விமானம் மூலம் துருக்கி விமான நிலையத்திலிருந்து ரகசியமாகத் தப்பியுள்ளார். 'Washington Post' மற்றும் 'New York' நாளிதழ்கள் வெளியிட்டுள்ள இந்த அதிரடிச் செய்தியால் சர்வதேச அரசியலே பெரும் பரபரப்புக்கு ஆளாகியுள்ளது.

துருக்கி தலைநகர் அங்காராவில் கடந்த மாதம் 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் NATO நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட NATO நாடுகளின் தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த மாநாட்டிற்கு, அதிபர் டிரம்ப், கத்தார் தனக்கு பரிசாக அளித்த Boeing 747-8 Air force one விமானத்தில் வந்தார். மாநாடு முடிந்ததும், அங்காரா விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது பழைய Boeing 747 விமானத்தில் ஏறினார்.

அந்த விமானத்தில் தான் அதிபர் தனது அடுத்தக்கட்ட பயணமாக பிரிட்டன் செல்கிறார் என பத்திரிகையாளர்கள் நினைத்தனர்... டிரம்ப் திரும்பிச் செல்லும் அந்த காட்சிகளை நேரலையாகவும் காட்டினர். ஆனால் நடந்தது என்பதே முற்றிலும் வேறு... இதனை Washington Post மற்றும் New York' நாளிதழ்கள் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன...

அங்காரா விமான நிலையத்தில் நடந்தது என்ன? - 747 Air force one விமானத்தில் ஏறிய டிரம்ப் சிறிது நேரத்தில், ரகசியமாக ஏர்போர்ட் கேட்டரிங் டிரக்கில் ஏற்றப்பட்டு ஓடுதளத்தின் வழியே மற்றொரு சிறிய C-32A என்ற ராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டார். பொதுவாக C-32A விமானம் அமெரிக்காவின் துணை அதிபர், First Lady, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ராணுவ உயர் தலைவர்களின் பயணத்திற்கு பயன்படுகிறது.

அதிபரின் பிரத்யேகமான விமானத்தில் உள்ள அனைத்து வசதிகளும் பாதுகாப்பு அம்சங்களும் இந்த விமானத்திலும் இருக்கும். ஈரானிடமிருந்து டிரம்பிற்கு அச்சுறுத்தல் இருந்ததால், அமெரிக்க அதிகாரிகள் இந்த Deception Operation-னை செயல்படுத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமெரிக்க உளவுத்துறையான Secret Service மற்றும் FBI டிரம்பிற்கு அச்சுறுத்தலைச் வெறும் 'வதந்தி' எனத் தள்ளுபடி செய்யாமல், அதை 'Credible Threat' என வகைப்படுத்துவதற்குச் சில கடுமையான அளவுகோல்களையும் அறிவியல் ரீதியான மேட்ரிக்ஸ்களையும் வைத்துள்ளன.

அதிபர் டிரம்பிற்கு ஈரானிடமிருந்து அச்சுறுத்தல் உள்ளது என்பதை நம்ப மற்றொரு முக்கிய காரணம் அங்காரா ஓடு தளத்தின் புவியியல் அமைப்பு. அங்காராவில் உள்ள எசன்போகா (Esenboğa) சர்வதேச விமான நிலையத்திற்கும் ஈரானிய எல்லைக்கும் இடையே உள்ள வான்வழித் தூரம் சுமார் 900 கிலோ மீட்டர்கள் ஆகும். 900 கிலோமீட்டர் என்பது சாதாரண வணிக விமானங்களுக்கு நீண்ட தூரமாகத் தெரிந்தாலும், நவீன ராணுவத் தொழில்நுட்பத்தின்படி இது மிக மிகக் குறுகிய தூரம்.

ஈரானிடம் உள்ள கோர்ரம்ஷஹர் ('Khorramshahr') அல்லது 'Fateh-110' வகை ஏவுகணைகள் 1,000 முதல் 2,000 கிலோமீட்டர் வரை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டவை. எனவே அங்காரா ஓடுதளம் ஈரானிய ஏவுகணைகளின் நேரடித் தாக்குதல் எல்லைக்குள் அமைகிறது. வழக்கமாக அமெரிக்க அதிபர் பயணிக்கும் 'Air Force One' விமானத்தில் ஏவுகணைகளைத் திசைதிருப்பும் Missile Defense Systems பொருத்தியிருந்தாலும், விமானம் தரையில் நிற்கும்போதோ அல்லது மிகக் குறைந்த உயரத்தில் பறக்கும்போதோ இந்த தற்காப்பு அமைப்புகளின் திறன் குறைகிறது. விமானத்தில் உள்ள லேசர் மற்றும் ரேடார் எச்சரிக்கை சென்சார்கள் பெரும்பாலும் வான்வெளியில் இருந்து வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறியவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

உயரத்தில் பறக்கும் போது ஏவுகணை வருவதைக் கண்டறிந்தால், தற்காப்பு அமைப்புகள் செயல்படவும் விமானி மாற்றுப் பாதையில் திரும்பவும் சில நிமிடங்கள் கிடைக்கும். ஆனால், விமானம் நின்றுக் கொண்டிருக்கும் போது தோளில் வைத்து இயக்கப்படும் MANPADS ஏவுகணைகள் இலக்கை அடைய 2 முதல் 5 விநாடிகளே ஆகும். இந்த குறுகிய காலத்தில் சென்சார்களால் எதிர்வினை ஆற்ற முடியாது.

அமெரிக்க அதிபருடன் எப்போதும் ஒரு White House Press Pool பயணிக்கும். அதிபர் விமானத்தில் ஏறுவதை நேரடியாகப் படம் பிடித்து நேரலை செய்த அந்த கேமராக்களுக்கு கூட தெரியாமல், விமானத்தின் மறுபக்க கதவு வழியாக டிரம்ப் கீழே இறக்கப்பட்டு ‘கேட்டரிங் டிரக்’-கிற்கு மாற்றப்பட்டார். பாதுகாப்புப் படையினர் ஏன் சொகுசு காரையோ அல்லது ராணுவ வாகனத்தையோ பயன்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழும். விமான நிலையத்தில் ராணுவ வாகனங்கள் நகர்ந்தால் எதிரிகளின் செயற்கைக்கோள்கள் உடனடியாகக் கணித்துவிடும்.

விமானங்களுக்கு உணவு மற்றும் பொருட்களை ஏற்றிச் செல்லும் பெரிய 'கேட்டரிங் டிரக்' ஓடுதளத்தில் அங்கும் இங்குமாக நகர்வது மிகவும் இயல்பான ஒன்று. எதிரிகளின் கவனத்தை ஈர்க்காமல் அதிபரைக் கடத்த அதுவே சிறந்த பாதுகாப்பு கவசமாக அமைந்தது. பலரும் 'Air Force One' என்பதை ஒரு குறிப்பிட்ட பிரம்மாண்ட போயிங் விமானத்தின் பெயர் என்றே நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில், அமெரிக்க அதிபர் எந்த விமானத்தில் ஏறுகிறாரோ, அந்த நிமிடத்தில் அந்த விமானத்தின் Call Sign- 'Air Force One' ஆக மாறிவிடும். அன்று டிரம்ப் ஏறிய சிறிய 'C-32A' விமானமே அதிகாரப்பூர்வமாக 'Air Force One' ஆக மாறியது. அதிபரின் கூடவே பயணிக்கும் சில மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகளுக்கும், டிரம்பின் தனிப்பட்ட அதிகாரிகளுக்கும் கூட இந்த Deception Operation கடைசி நிமிடம் வரை தெரிவிக்கப்படவில்லை. தகவல் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக, 'Secret Service' அமைப்பின் மிகக் குறுகிய உயர்மட்டக் குழு மட்டுமே இந்த ஆபரேஷனைத் திட்டமிட்டு நடத்தியது....

அமெரிக்க அரசியலமைப்பின்படி, நாட்டின் அதிபருக்கு ஒரு சதவிகித ஆபத்து சாத்தியக்கூறு இருந்தாலும், 'பாதுகாப்பான Protocol-லை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பது விதி. இதன் காரணமாகவே, சிறிய அச்சுறுத்தல் தகவலுக்கு கூட அமெரிக்கா பெரிதாக React செய்கிறது. அங்காரா ஓடுதளத்தில் 'Air Force One' மீது ஒரு சிறிய டிரோன் தாக்குதல் நடந்திருந்தாலும் கூட, அது அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நேரடி உலகப்போரை மூட்டியிருக்கும்.

இந்த ரகசிய நடவடிக்கை, வெறும் பாதுகாப்பு மாற்றம் மட்டுமல்ல; நவீன புவிசார் அரசியலில் உளவுத்துறை உத்திகள் எந்த அளவிற்கு அதிநவீனமாக மாறியுள்ளன என்பதற்கான சான்று. எதிரியின் திட்டங்களை முன்கூட்டியே கண்டறிந்து, உலக ஊடகங்களின் கண்ணெதிரிலேயே அதிபரைப் பாதுகாப்பாக வெளியேற்றியதன் மூலம், அமெரிக்கச் பாதுகாப்புப் படைகள் தங்களின் 'டிசெப்ஷன் உத்தியை' மிகச்சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளன. அதே வேளையில், வல்லரசுகளின் தலைவர்களையே தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வைக்கும் அளவிற்குப் பிராந்திய அச்சுறுத்தல்கள் தீவிரமடைந்துள்ளன என்பதையும் இந்தச் சம்பவம் உலகிற்கு உணர்த்தியுள்ளது.

news18


 


Post a Comment

0 Comments