Ticker

6/recent/ticker-posts

வானியலின் அழகிய அற்புதம்... அரிதான முழு சூரிய கிரகணத்தின் அதிசய காட்சிகள்! #InPhotos


ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும் பகுதி மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது.

வானியலின் அழகிய அற்புதங்களில் ஒன்றான, அரிதான முழு சூரிய கிரகணம், ஸ்பெயினில் தனது நிழலைப் பரப்பிய தருணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு சந்திரன் முதன்முதலில் சூரியனை மறைத்தது. அப்போது அதன் வெளிப்புற ஒளிவட்டத்தின் மினுமினுப்பான ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது.

அதன்பின் ஐஸ்லாந்தின் தலைநகரான ரெய்க்ஜாவிக் (Reykjavík) நகரில், 1433 ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தை வானியல் ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் உட்பட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு களித்தனர்.

ஐரோப்பிய நாடுகளில் சூரியன் மறையும் நேரத்தில் கிரகணம் நிகழ்ந்ததால் கிரகணத்துடன் கூடிய சூரிய அஸ்தமனத்தை காணும் அரிய வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக ஸ்பெயினில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த முழு சூரிய கிரகணத்தைக் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர்.
ஒரே இரவில் வைரல் ஆன ரம்யா பாண்டியன்… மீண்டும் மொட்டை மாடியில் அதிரடி!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் சூரிய கிரகணத்தை கண்டு களித்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை பகுதி சூரிய கிரகணம் கடந்து சென்றதை  மக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.

ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள், வடமேற்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகள், கனடாவின் பெரும் பகுதி மற்றும் வட அமெரிக்காவின் சில இடங்களில் பகுதி சூரிய கிரகணம் நிகழ்ந்தது. இந்திய நேரப்படி இரவு 11.16 மணிக்கு சூரிய கிரகணம் நடைபெற்றதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியவில்லை.

news18


 


Post a Comment

0 Comments