
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநில நீதிமன்றம் மெட்டா (Meta) நிறுவனத்துக்கு 567 மில்லியன் டாலர் (சுமார் 727 மில்லியன் வெள்ளி) அபராதம் விதித்துள்ளது.
அதன் தளங்களில் பிள்ளைகளுக்கு ஆபத்து விளைவிக்கும் அம்சங்கள் குறித்து நிறுவனம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
மெட்டா ஒரு தொழிற்சாலை போன்றது என்று நீதிமன்றம் கூறியது.
அது விளம்பரங்களையும் உள்ளடக்கங்களையும் தயாரிக்கிறது; ஆனால், குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் பாதிப்புகளைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக நீதிமன்றம் சொன்னது.
வழக்குத் தொடர்பில் நிறுவனத்திற்கு ஏற்கனவே 375 மில்லியன் டாலர் (சுமார் 480 மில்லியன் வெள்ளி) அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய எண்ணம் இருப்பதாக நிறுவனம் கூறியிருந்தது.
பிள்ளைப் பாதுகாப்பு விவகாரத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டது அதுவே முதல்முறை.
தற்போது நிறுவனம் எதிர்நோக்கும் மொத்த அபராதம் 942 மில்லியன் டாலர் (1.2 பில்லியன் வெள்ளி).
மெட்டா நிறுவனம் Instagram, Facebook, WhatsApp, Threads ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments