Ticker

6/recent/ticker-posts

இன்னா நாற்பது - 12


இன்னா நாற்பது - 21.

ஈத்த வகையா னுவவாதார்க் கீப்பின்னா
பாத்துண லில்லா ருழைச்சென் றுணலின்னா
மூத்த விடத்துப் பிணியின்னா வாங்கின்னா
ஓத்திலாப் பார்ப்பா னுரை.

விளக்கம்: 
  • என்ன கொடுத்தாலும் மன நிறைவே இல்லாதவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவது துன்பமாகும். 
  • பிறரிடம் பகிர்ந்து உண்ணாதவர்களுடன் சேர்ந்து, உணவு அருந்துவது துன்பமாகும். 
  • வயதான காலத்தில் நோய் வாய்ப் படுவது துன்பமாகும். 
  • மறை ஓதா அந்தணர் கூறுபவன எல்லாம் துன்பமாகும்.
இன்னா நாற்பது - 22.

யானையின் மன்னரைக் காண்ட னனியின்னா
ஊனைத்தின் றூனைப் பெருக்குதல் முன்னின்னா
தேனெய் புளிப்பிற் சுவையின்னா வாங்கின்னா
கான்யா றிடையிட்ட வூர்.

விளக்கம்:
  • யானைப் படை இல்லாத மன்னனைக் காண்பது துன்பமாகும். 
  • பிற உயிர்களைக் கொன்று அதன் உடலைத் தின்று நம் உடலை வளர்ப்பது துன்பமாகும்.
  • தேனும் நெய்யும் புளித்துப் போய்விட்டால், அது தரும் சுவை துன்பமாகும். 
  • கரை புரண்டு ஓடும் காட்டாறுகளுக்கிடையே உள்ள ஊரில் வசிப்பது துன்பமாகும்.

(தொடரும்)

 


Post a Comment

0 Comments