Ticker

6/recent/ticker-posts

பிசின் சர்பத்! கலா சமையல்


வெயில் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கவும், வயிற்றுக்கு இதமாகவும் இருக்கும் ஒரு பாரம்பரிய பானம் இது.

தேவையான பொருட்கள்

வேம்பு, மதுரம், நாவல், கருவா, பனை, முருங்கை, பாலை, முந்திரி போன்ற மரங்களில் கிடைக்கும் பிசின்களில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம். அல்லது உங்களுக்கு விருப்பமான ஒரு வகை பிசினை மட்டும் தேர்வு செய்து கொள்ளலாம்.
பிசினை எடுத்தவுடன் அதில் இருக்கும் மரத்தூசி மற்றும் அசுத்தங்களை நீக்கி, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைக்கவும்.

மறுநாள் ஊறிய பிசினை நன்றாகக் கசக்கிப் பிழிந்து, இரண்டு முறை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து, நீரை வடித்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொள்ளவும். தேவையான போது சிறிதளவு எடுத்துப் பயன்படுத்தலாம்.

சர்பத் செய்முறை

இளம் தேங்காயில் இருந்து எடுத்த கெட்டியான முதல் தேங்காய்ப் பால்

ஊறவைத்த கசகசா

கரும்புச் சாறு அல்லது கருப்பட்டி வெல்லம் அல்லது கறுப்பு சீனி (ஏதாவது ஒன்று)

கரும்புச் சாறு அல்லது வெல்லம், சீனி ஆகியவற்றில் ஏதாவது ஒன்றைச் சிறிது கொதிக்க வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

இனிப்பு சேர்க்க விரும்பாதவர்கள் தேவையான அளவு தேன் கலந்து கொள்ளலாம்.

காலை நேரத்தில் தேவையான அளவு பிசின், இனிப்பு, தேங்காய்ப் பால், கசகசா ஆகியவற்றுடன் சிறிதளவு குளிர்ந்த நீர் சேர்த்து கலந்து பருகலாம்.

குறிப்பு: பிசின், கசகசா போன்ற பொருட்கள் பாரம்பரியமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், குறிப்பாக வயிற்று தொடர்பான நோய்களுக்கு, மருத்துவரின் ஆலோசனையையும் கவனத்தில் கொள்ளவும்.

ஆர்.எஸ்.கலா

 


Post a Comment

0 Comments