Ticker

6/recent/ticker-posts

அழகான ராட்சசன் நீ!


நீ பேரழகனா இல்லை,
என்னை விரும்பும் காதலனா இல்லை,
ஆனால் என் மனதை கவர்ந்தவன் நீ.
பலர் உன்னை விரும்பலாம்,
பலர் உன்னை ரசிக்கலாம்,
ஆனால் என் மனதில் நீ மட்டுமே.
என் கண்கள் தேடும் முகம் நீ,
என் மனம் தேடும் குரல் நீ,
என் கனவுகளில் வரும் நிழல் நீ,
என் நினைவுகளில் நிறைந்தவன் நீ.
உன்னை நினைக்காமல் ஒரு நாளும் இல்லை,
உன்னை மறக்கவும் என் மனம் விரும்பவில்லை.
என் இதயம் யாரையும் தேடவில்லை,
உன்னிடமே வந்து நின்றுவிட்டது.
என் மௌனத்திற்கும் அர்த்தம் நீ,
என் சிரிப்பிற்கும் காரணம் நீ,
என் கனவுகளின் அழகான உலகம் நீ,
என் காதலின் சொல்லாத கவிதை நீ,
என் உயிரோடு கலந்த உணர்வு நீ,
என் வாழ்வின் இனிய நினைவு நீ,
எத்தனை பேர் வந்தாலும் மாறாதவன் நீ,
என் மனம் தேர்ந்தெடுத்த ஒருவன் நீ,
என் காதலின் அழகான ராட்சசன் நீ.

ஜெயசூர்யர் ஜெயராணி
நெதர்லாந்து

 


Post a Comment

0 Comments