
மல்லிகா எழுதிய கடிதம் மங்கையின் கைக்கு வந்தது.
அந்தக் கடிதத்தை ஆவலுடன் படித்த மங்கை, அதில் இருந்த அனைத்து விஷயங்களையும் அறிந்துகொண்டாள்.
"இதை உடனே மலரிடம் சொல்ல வேண்டும்," என்று நினைத்தவள், அவள் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
மலரின் வீட்டை நெருங்கும் முன், வழியில் இருந்த ஒரு கடையில் பழங்களும் இனிப்புகளும் வாங்கினாள்.
"மலரின் பிள்ளைகளுக்கு இதைக் கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பார்கள்," என்று நினைத்தாள்.
மலரின் வீட்டிற்குள் நுழைந்தவுடன், அவளைப் பார்த்த குழந்தைகள் மகிழ்ச்சியுடன்,
"ஆண்ட்டி வந்துட்டாங்க!" என்று ஓடி வந்து கட்டிப்பிடித்தனர்.
மங்கை சிரித்தபடி அவர்கள் அனைவருக்கும் வாங்கி வந்த பழங்களையும் இனிப்புகளையும் கொடுத்தாள்.
அந்தச் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி, அவள் மனதையும் நெகிழச் செய்தது.
சிறிது நேரம் அனைவருடனும் பேசிக்கொண்டிருந்த மங்கை, பிறகு மலரை அமைதியாக அமர வைத்தாள்.
"மல்லிகாவிடமிருந்து ஒரு கடிதம் வந்திருக்கிறது... அதில் முக்கியமான விஷயம் இருக்கிறது," என்று கூறியபடி அந்தக் கடிதத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.
மங்கை மல்லிகாவின் கடிதத்தை மலரிடம் கொடுத்தாள்.
அதை முழுவதுமாக வாசித்த மலர், சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.
பிறகு மங்கையைப் பார்த்து,
"இப்போது நாம் என்ன செய்யலாம்?" என்று கேட்டாள்.
அதற்கு மங்கை,
"இதற்கு ஒரே வழிதான். நாம்மூவரும் ஆதியை நேரில் சந்திக்க வேண்டும். இப்போது பூங்கொடியிடம் எதையும் சொல்ல வேண்டாம்," என்றாள்.
மலரும் அதற்கு சம்மதித்து,
"சரி... அப்படியே செய்வோம். முதலில் உண்மையை முழுவதுமாக தெரிந்துகொள்வோம். அதன் பிறகு பூங்கொடியிடம் பேசலாம்," என்றாள்.
உடனே மலர், மல்லிகாவுக்கு பதில் கடிதம் எழுதத் தொடங்கினாள்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com





0 Comments