
வாழைக் கன்று முளைத்து ஒரு மாதத்திற்குள் இருக்கும் போது, அதன் அடிப்பகுதியில் உள்ள பட்டைகளை நீக்கி எடுத்துக் கொள்ளவும். உடைத்தவுடன் எளிதில் உடையக்கூடிய மென்மையான பட்டைகளை மட்டும் தேர்வு செய்து, சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
அவற்றை புளி, உப்பு கலந்த நீரில் 30 நிமிடங்களுக்கு மேல் ஊறவிடவும். பின்னர் ஒரு மணி நேரம் நன்றாக வேகவைத்து, நீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.
குறிப்பு: இது வாழைத்தண்டு அல்ல; வாழைப் பட்டை. தண்டும் பட்டையும் வேறு வேறு பகுதிகள்.

தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி கடுகு
1 தேக்கரண்டி சிறு சீரகம்
1 தேக்கரண்டி உளுத்தம்பருப்பு (தாளிப்பிற்கு)
1 கைப்பிடி கறிவேப்பிலை
1 பெரிய வெங்காயம்
1 சிறிய கப் தேங்காய்ப் பால்
5 காரமான பச்சை மிளகாய்
2 மேசைக்கரண்டி எலுமிச்சைச் சாறு
1 சிட்டிகை அஜினோமோட்டோ
சிறிதளவு சீனி
தேவையான அளவு உப்பு
தாளிக்கத் தேவையான எண்ணெய்
1 மேசைக்கரண்டி மிளகுத்தூள்
குறிப்பு: மஞ்சள்தூள் சேர்க்க வேண்டாம்.
செய்முறை
ஒரு சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும். அதில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதன்பின் புளி, உப்பு, அஜினோமோட்டோ, சீனி ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாகக் கொதிக்கும் போது வேகவைத்து வைத்துள்ள வாழைப் பட்டையைச் சேர்க்கவும். நீர் வற்றும் நேரத்தில் தேங்காய்ப் பாலை ஊற்றி ஒரு கொதி விடவும்.
இறுதியாக அடுப்பை அணைத்து, கறிவேப்பிலை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கிளறி மூடி வைக்கவும்.
சுவையான
மாற்று முறை
வாழைப் பட்டையை இவ்வாறு சமைத்து உண்ண விரும்பாதவர்களுக்கு
ஒரு சுலபமான முறை:
1 தேக்கரண்டி வறுத்து பொடி செய்த இறால் கருவாட்டுத் தூள்
1 மேசைக்கரண்டி கட்டிக் கெட்சப்
1 மேசைக்கரண்டி தண்ணீர் கெட்சப்
4 காரமான நறுக்கிய சில்லி
தேவையான அளவு உப்பு
இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் வேகவைத்த வாழைப் பட்டையைச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து அப்படியே சாப்பிடலாம். இதுவும் சுவையான ஒரு வகை.
குறிப்பு: வாழையின் பல பகுதிகளையும் உணவாகப் பயன்படுத்தும் நம் பாரம்பரிய முறைகளில் இதுவும் ஒன்று.
ஆர்.எஸ்.கலா

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments