
இதையடுத்து உமா மகேஸ்வரன் குடும்பத்தினர் அந்த பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தினர். மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கருவுற்ற பூனைகள் அலங்கரிக்கப்பட்டன. நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு, கைகளில் வளையலுக்கு பதில் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டன. மேலும் அந்த பூனைகளுக்கு பிடித்த பழங்கள், பிஸ்கட்கள் மற்றும் இனிப்புகள் உள்பட உணவு பொருட்கள் சீர் வரிசையாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அங்கிருந்த பலர் கலந்து கொண்டனர்.



0 Comments