Ticker

6/recent/ticker-posts

மேலும் அதிகமானோர் Twitterஇல் வேலையை இழக்கக்கூடும் - ஊடகத் தகவல்


Twitter நிறுவனம் வரும் வாரங்களில் 50 ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர்கள் உற்பத்திப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று Insider செய்தித்தளம் கூறியது.

புதிய ஆட்குறைப்புத் திட்டத்தால் நிறுவனத்தின் ஊழியர் எண்ணிக்கை 2,000க்குக் கீழ் குறைந்துவிடக்கூடும் என்று அது சொன்னது.

சுமார் 6 வாரங்களுக்கு முன்பு தான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலோன் மஸ்க் இனிமேல் ஆட்குறைப்பு இருக்காது என்று ஊழியர்களிடம் கூறியிருந்தார்.

அவர் சென்ற அக்டோபர் மாதம் Twitter நிறுவனத்தை வாங்கியதிலிருந்து ஊழியர் அணியில் சுமார் 50 விழுக்காட்டினரைக் குறைத்தார். 

Twitter வருவாயும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
SOURCE;seithi.mediacorp


 


Post a Comment

0 Comments