
சினேகா அடிக்கடி செல்போனில் பேசிக் கொண்டிருப்பதாகவும் அதனை கணவர் கண்டித்து உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் பலநாட்கள் தகராறு ஏற்பட்டு கோபித்து கொண்டு தந்தை வீட்டுக்கு சென்று விடுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று சினேகா குழந்தையுடன் மைக்கில் மதன் சிங் தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சினேகா போனில் பேசி இருந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மைக்கில் மனைவியிடம் இருந்து போனை பிடுங்கி ஆவேசமாக உடைத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சினேகா அங்கிருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு வந்து அறையை பூட்டிக்கொண்டு உள்ளே தூக்கிட்டு கொண்டார். அலறும் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சீனேகாவை தூக்கில் இருந்து இறக்கி பணகுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த தகவல் சினேகாவின் உறவினர்களுக்கு தெரியவந்தது. உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து மைக்கேல் மதன் சிங் சினேகாவை அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும் இன்றும் அடித்து கொலை செய்து விட்டார் என்று கூறி வாக்குவாதம் செய்தனர். இதனை அடுத்து போலீசார் மைக்கில் மதன் சிங்கை காவல் நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து சப் கலெக்டர் முகமது சபீர் ஆலம் நேரடியாக வந்து சினேகாவின் உறவினரிடம் தாய் தந்தையரிடம் விசாரணை நடத்தினார்.
இறந்த சினேகாவின் உடலில் வேறு எங்கும் காயம் இல்லை. தூக்கிட்டு கொண்ட கழுத்தில் மட்டுமே காயம் இருந்தது இருப்பினும் பிரேத பரிசோதனைக்காக பாளை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சினேகா செல்போன் உடைத்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது கணவர் கொலை செய்ததாரா ? என்பது குறித்து பணகுடி போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
SOURCE;news18
தமிழ்நாடு செய்திகள் படிக்கவும்
இலங்கை செய்திகள் படிக்கவும்
இந்தியா செய்திகள் படிக்கவும்
உலக செய்திகள் படிக்கவும்
விளையாட்டு செய்திகள் படிக்கவும்
இலங்கை செய்திகள் படிக்கவும்
இந்தியா செய்திகள் படிக்கவும்
உலக செய்திகள் படிக்கவும்
விளையாட்டு செய்திகள் படிக்கவும்
.gif)



0 Comments