Ticker

6/recent/ticker-posts

ராஜகுமாரியின் சுயம்வரம்-10

தேர்வு படலம் நிறைவு பெறவே  மகாராணி  எழுந்து நின்றார் அவர் எழுந்ததும் அனைவரும் எழுந்தார்கள் ராணி மந்திரியைப் பார்த்துக் கூறினார் 

நீங்கள் என்னோடு வாருங்கள் மந்திரியாரே  என அழைத்த கையோடு  நடந்தார் மந்திரியும் உத்தரவு  அரசியே என்று உரைத்து விட்டு படைத் தலைவனிடம் கூறினார் 

வேந்தனே இவர்கள் அனைவரையும் அழைத்துச் சென்று போசனம் உண்ணக் கொடுங்கள் ராணியாரைப் பார்த்து விட்டு வந்து மீதம் கூறுகின்றேன் என்று உத்தரவு போட்டார் 

உடனே சரிங்க மந்திரியாரே என்று படைத் தலைவன்  வேந்தன் ஆமோதித்தான் மந்திரியாரும் அவ்விடம் விட்டு சென்று விட்டார் 

வேந்தனும் சில காவலர்களும் மாத்திரமே எஞ்சினார்கள் அவர்கள் வைத்தியர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அன்னதானம் கொடுக்கும் மண்டவத்துக்குச் சென்றனர்  போனதும் பார்த்தால் கோமாளி வைத்தியன் கோபால் ச்சும்மா  வெடக்கோழிக் குழம்பு  பல வகை காய் கனியோடு இலையில் சாப்பாடு வைத்துக் கொண்டு  அள்ளி அள்ளி திணிக்கான் வாய்க்குள் யாரும் பறித்திடுவார்களோ என்னும் பயத்தோடு தலையை நிமிர்ந்து அந்தப் பக்கம் இந்தப் பக்கம் பார்க்காமலே. அவனைக் கண்ட வைத்தியர்களுக்கு சிற்று பொறாமையும் அதிக சிரிப்பும் தொற்றிக் கொண்டது.  

என்ன கோபாலா நல்ல விருந்தோ என்று வினாவினார் அவர்களோடு வந்திருந்த வயதில் முதிந்த வைத்தியர் முருகேசன்  ஐயா.  அப்போதுதான் நிமிர்ந்து பார்த்தான் கோபால்  அவசரமாக உணவை  விழுங்கி விட்டு கேட்டான் 

உங்களையும்  ஏன் கொண்டு வந்தாங்க. தப்பு பண்ணித்திங்களா அப்பாடா இப்போதுதான்  சந்தோசமாக இருக்கு நான் மட்டும் எப்படி இந்த. பெரிய அறையில் தங்குவேன் என்று கூறி அன்னதான மடத்தைக் காட்டினான்  . 

முருகேசன் வைத்தியர் தன் தலையில் அடித்துக் கொண்டார் அடுத்தவர் யாரும் அவனிடம்  எவ்விதமான கேள்வியும் கேட்கவில்லை  .அவன் அதோடு அவர்களைத் திரும்பியும் பார்க்காமல் சோறே சொர்க்கம்  என்று உண்ண ஆரம்பித்து விட்டான் 

சற்று நேரத்தில்  பெரும் பாத்திரங்களில்  விதம் விதமான உணவு பண்டங்கள் வந்து இறங்கினர் பணியாளர்கள்  சிலர் வந்து அனைவருக்கும் உணவு பரிமாறத் தொடங்கினார்கள்.  கடுமையான பசியோடு காத்திருந்த வைத்தியர்கள் பேச்சு மூச்சு இன்றி அமைதியாகவே சாப்பிட ஆரம்பித்தார்கள்.  

அதே நேரத்தில்  மந்திரியும் மகாராணியும் கலந்து உரையாடி பத்து வைத்தியர்களை தேர்வு செய்தனர் அவர்களை தங்க வைக்கும் ஏற்பாட்டை பணியாளரை அழைத்துக் கூறி விட்டு ஏனைய வைத்தியர்களுக்கு சிறு சன்மானம் கொடுத்து அனுப்பி வைக்குமாறு கட்டளை இட்டார் மகாராணி 

மந்திரியும் சரி என ஏற்றுக் கொண்டார் ராணி ஓய்வு எடுக்க சென்று விட்டார் அந்தப்புரம்  மந்திரி மாத்திரம் சற்று சிந்தனையில் மூழ்கி விட்டு எழுந்து வந்தார் வைத்தியர்களின் பக்கத்தில் .சாப்பாடு திருத்தியாகக் கிடைத்ததா என்று கேட்டு புன்னகை புரிந்து விட்டு அவர் வந்த காரணத்தை உரைத்தார்  தாங்கள் தேர்வு செய்த பத்துப் பெயரின்  பேர்களைக் கூறி அவர்கள் அனைவரும் தங்கிடும் படியும் நாளை முதல் ராஜகுமாரிக்கு வைத்தியப் பணியை ஆரம்பிக்குமாறும் கூறி விட்டு ஏனைய வைத்தியர்களிடம் நன்றி கூறி தான் கொஞ்சம் வெள்ளிப் பணம் எல்லோர் கைகளிலும் தருவதாகவும் வீட்டுக்கு வேளையிலே சென்று விடுமாறும் கூறினார்  அவர் கூறிக் கொண்டு இருக்கும் போதே பணத்துடன் கணக்கப்பிள்ளை அவ்விடம் வந்து விட்டார். 
(தொடரும்.)



 


Post a Comment

1 Comments

  1. நன்றி அண்ணா ஆனார் பிறர் கருத்தைப் பார்க்க இயல வில்லையே

    ReplyDelete