
பெரியகல்லின் மேற்பகுதிக்கு பெரியவர் வந்து சேர்ந்ததும், அவர் பின்னால் வந்த அவரது நட்புவட்டத்திலிருந்த மந்திகள் இரண்டு, அவரது பாதுகாப்பாளர்கள்போல் அவருக்கு இருபுறமும் நின்று கொண்டன.
புரோகொனிஷ் மக்களோடு மற்ற மக்களும் சேர்ந்து வந்து பெரியவரைக் காண்பதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்த வேளையில் தீச்சுடர் ஒன்றை ஏந்தியவர்களாக, செரோக்கியியும், ரெங்க்மாவும் ஒருசேர வந்து சேர்ந்தனர்.
அவர்கள் ஏந்திவந்த தீப்பந்தம் சகல மரியாதைகளுடனும், பெரியவரிடம் கொடுக்கப்பட்டதும், அவர் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்திருந்த, காய்ந்த இலைப்பொதிக்குள் ஏதோ ஒரு மந்திரத்தை ஓதியவராக அதனை வைத்தபோது, தீ கொளுந்துவிட்டு எறிந்து, மெல்ல மெல்ல காட்டுப்பகுதி நோக்கிச் செல்லலானது.
கூடி நின்றிருந்தோர் கும்மாளமிட்டு ஆடலுடன், அவர்களுக்கேயுரிய பாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக முடுக்கிவிட்டனர்!
நேரம் ஆக ஆக கர்ணகடூரமாக வெளியான அவர்களது பாடல் சத்தம் முற்று முழுவதுமாக அந்தக் கற்பாறையையே அதிரச் செய்தது. அந்த அதிர்வின் தாக்கத்தால், அருகிலிந்து மரங்களில் கூட்டுக்கட்டிக் குடியிருந்த பறவைகள், அந்த இடத்தை விட்டும் பறந்து போகலாயின!
அமைதியாகக் கல்லடிவாரத்தில் தவமிருந்து வந்த பெரியவருக்கு இது ஒரு புதிய அணுபவமாக இருந்தது!
அவர் தன் இரண்டு கைகளையும் கொண்டு, காதுகளை அடைக்கலானார்!
மந்திகள் இரண்டும் அவரிடத்தில் தாம் இப்போது கண்ட புதுவிதமான நடத்தைகளைப் பார்த்துப் பிரமித்துப் போயின!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments