Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-71


குறள் 689
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன். 

ஒரு அரசின் கருத்தை கச்சிதமாக எடுத்துரைக்க வேண்டிய தூதுவன், வாய் தவறிக்கூட, தவறான தகவலை சொல்லி விடக் கூடாத ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும். 

குறள் 690
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.

தம்பி.. ஒரு தலைவனோட நம்பிக்கையான தூதுவன்னா அவன் தனக்கு வரக்கூடிய அழிவை நெனச்சு பயப்படாம, எப்பமும் தலைவனுக்கு பக்கபலமா இருக்கது தான். 

குறள் 692
மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.

மாப்ள.. நீ தலைவரோட நல்ல படியா காலந்தள்ளணும்னா, அவரு எதுக்குல்லாம் ஆசைப்படுதாரோ, அதுக்கெல்லாம் நீயும் ஆசைப் படக்கூடாது. நீ மட்டும் இப்படி நடந்துக்கிட்டா ஒன்னை யாரும் அசைக்கவே முடியாது மாப்ள. 

குறள் 693
போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

தம்பி... தலைமையிடமிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளணும்னா, தப்புத் தண்டா எதுவும் செய்யாம இருக்கணும். தப்பித் தவறி நம்ம மேல சந்தேகம்னு வந்துட்டா, அதுலயிருந்து வெளியே வரது அத்தனை லேசுப்பட்டதில்லை தம்பி.. 

குறள் 695
எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

மாப்ள.. நம்ம தலைமை ரகசியமா பேசிக்கிட்டு இருக்கும் போது ஒட்டுக் கேக்கக் கூடாது. என்ன பேசுதியன்னு அவொட்ட கேக்கவும் கூடாது. அவொளா என்ன சங்கதின்னு சொன்னா மட்டும் தான் தெரிஞ்சிக்கிடணும் மாப்ள. 
(தொடரும்)



 


Post a Comment

0 Comments