Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா 145


பெரியவர் தான் இரு  கரங்களாலும் காதுகளை அடைத்துக்கொண்டவராக  கானகத்துப் பழங்குடியினரின் ஆடல் பாடல்கள் முடிவுக்கு வரும் வரை  பொறுமையாக இருந்தார்.

ஒரு புறம் காய்ந்த இலைப்பொதிக்குள் அவர்  மந்திரம் ஓதி வைத்த தீ கொளுந்துவிட்டு எரிந்து,  காட்டுப்பகுதியைத் துவம்சம் செய்து கொண்டிருந்தபோதும், 'காடு எரிகிறதே' என்ற கவலை ஒரு துளியும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இது அவர்களின் பீடபூமி. இதில் அவர்கள் எதையும் செய்வார்கள். கேட்பதற்கு எவரும் கிடையாது!

'பெரியகல்'லிலிருந்து  உண்டான முழக்கம், புரோகோனிஷ்  கிராமம் முழுவதும் சங்கமமாகி, அலவத்தையையும் தாண்டி, ஒட்டுமொத்தக் கானகத்தையும் இன்னொரு விதத்தில் துவம்சம் செய்து கொண்டிருந்தது.

செரோக்கியும் ரெங்க்மாவும்  மிகத் தீவிரமாக ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் கானகத்தின் புத்தம் புதிய காதல்  சோடியான ரங்குவும், சிங்கினியும் வரிந்து கட்டிக் கொண்டவர்களாக  தமது ஆட்டத்தில் தீவிரம் அடைந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் அப்பிடி என்னதான் பாடுகின்றார்கள் என்பதைக் கேட்டுவிடலாம் என்ற ஆர்வத்தில்,  தன் இரு  கைகளாலும்  இறுக்கி மூடியிருந்த காதுகளை மெல்லத்திறந்தபோது  அந்தப் பாடல் வரிகள் பெரியவரின் காதுகளுக்குள்  நுழைந்தது.

“ஹர்கின்ஸ்” என்று  ஆதிக்குடிகளால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்த  மூத்தவர், செரோக்கியின் பரம்பரையின் முதற்குடி!

அவர் பாடிப்பழக்கிவிட்டுச் சென்ற அதே பாடலைப் பல நூறு வருடங்கள் கழிந்த பின்னரும் எவ்வித மாற்றங்களுமில்லாமல் அவர்கள்  பாடிக்கொண்டிருந்தனர்.

"நேற்று  படிக்கட்டின் மேல் கண்ட மனிதனைக் காணவில்லை

அவனைக் காணவில்லை மறுபடியும்,ஓ அவன் போனதை எப்படி யானறிவேன்?நேற்றிரவு மூன்று மணிக்கு நான் வீடு வந்தபோது,

அந்த மனிதன் எனக்காகக் காத்திருந்தான்.நான் நடையைச் சுற்றிப் பார்த்தபோது,அவனை எங்கும் காணவில்லை!

போய்விடு போய்விடு இனிமேல் எப்போதும் வந்துவிடாதே!
போய்விடு போய்விடு தயவுபண்ணி  இனிமேல் கதவு தட்டாதே..."

இந்தப் பாடல் வரிகளைக் கேட்டதும், கல்லடிவாரத்திலிருந்து வந்த பெரியவர் குழம்பிப் போய்விட்டார்... இது கானகத்துக்கு உரித்தான பாடல் வரிகள் அல்லவே....!
(தொடரும்)




 


Post a Comment

0 Comments