Ticker

6/recent/ticker-posts

சிந்தனையை தூண்டும் வாழ்வியல் நிஜங்கள்-37


வாக்கினிலே இனிமை
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

(100 – குறள்) என்னும் குறள் மூலம், சொல்பவர்க்கும் கேட்பவர்க்கும் இன்பம் தரும் சொற்கள் இருக்க, அவற்றை விட்டுவிட்டு இனிமையில்லாத தீய, கடுஞ் சொற்களைக் கூறுவது. கனிகள் இருக்கும்போது,

அதைவிட்டு காயைத் திருடித் தின்பதைப் போன்றது என்ற கருத்தைக் குறளாசான் பதிவு செய்கிறார்.

இன்சொல் பகைமை தவிர்க்கும் ; நலம் பல நல்கும் ; சிறப்புகள் சேர்க்கும் ; வாக்கின் இனிமை மனத்தைக் குளிர்விக்கும். உண்மை தான் சொல்லுக்கு உயிர்ப்பு உண்டு. சொல்லானது உயிர்பெற்று பலித்துவிடும். எச்சூழலிலும் அமங்கலச் சொற்களைப்பயன்படுத்தக் கூடாது.

ஒரு சொல் பொருளறிந்து கூறினாலும் சரி, பொருளறியாமல் கூறினாலும் சரி, கூறப்பட்ட சொல், எதைச் சுட்டுகின்றதோ, அது நடந்தே தீரும். தீ சுடுவதைப் போல... மலர்கள் மணம் வீசுவதைப் போல... வார்த்தைகளும் சுடும்... மணம் வீசும்.

ஏனெனில் வார்த்தைகள் விதைகள்; வெளிப்பட்டுவிட்டால் முளைத்தே தீரும்; விளைவை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

வார்த்தைகளிலும் சுவையுண்டு ; சூடும் உண்டு ; தனிப்பும் உண்டு ; மருந்தும் உண்டு; தேனும் உண்டு; கொடுக்கும் உண்டு;

நாம் பேசும் வார்த்தைகளுக்கென தனியான மணமும் உண்டு. துர்நாற்றமும் உண்டு ; சில வார்த்தைகள் இனிக்கும் ; சில கசக்கும் ; சில சொற்கள் ஒளிவீசும் ; சில சொற்கள் இருளைப் போர்த்தும் ; சில வார்த்தைகள் உயிரைக்குடிக்கும் ; சில சொற்கள் உயிரைக் காக்கும்; சிலவேலையோ, உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால், அவன் ஒரு கிலோ கூட எடை கூடக் கூடாது என்றார். மன்னரிடமே சவாலா !!! அக்பர் யோசித்தார். தன் அருகில் இருந்த பீர்பாலைப் பார்த்தார். பீர்பால் அரசர் அக்பர் சார்பாக அந்த சவாலை ஏற்றார்.

மூன்று வேளைகளும் தவறாது மகத்தான விருந்துணவு அவனுக்குப் படைக்கப்பட்டது. ஓரிரு மாதங்கள் கழிந்தன. அவனது எடை அப்படியே இருந்தது என்பதை விட எடை குறைந்தும் விட்டது. அக்பருக்கோ ஒரே ஆச்சரியம் ! இது எப்படி சாத்தியம் என, பீர்பால் சொன்னார். இது வேறொன்றுமில்லை மன்னரே !அவனுடைய இரவுப் படுக்கையை மட்டும் சிங்கக் கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு தாழிடப்படவில்லை. எப்போது வேண்டுமானாலும் திறந்துக் கொள்ளும் என்று சொன்னேன். அவ்வளவுதான், பயத்தின் காரணமாக சத்து அவன் உடலில் ஒட்டவில்லை என்றாரே பார்க்கலாம்.

“எண்ணம் போல் வாழ்வு” ஒரு எண்ணத்தை எண்ணமாகப் பார்த்தால் அது ரசனை. ஒரு எண்ணத்தை சற்று கவனித்துப் பார்த்தால் அது சிந்தனை. ஒரு எண்ணத்தை நினைத்து நாம் செய்யும் செயலுக்குப் பெயர் தியானம். ஒரு எண்ணத்தை நினைத்து, நினைத்தபடியே அடைய நாம் செய்வது தான் தவம். அச்சம் தவிர்த்து, சலனமின்றி, தூய நற்சிந்தனையுடன் தவ வாழ்க்கை வாழ்வோம் ! அதுவே ஆரோக்கிய வாழ்வின் வித்தாகும். நலம் பெற்று நீடுவாழ்வோம்.!

வாழ்க்கையில் வெற்றி பெற
“தகுதி” அவசியம்... அவை த -(தன்னம்பிக்கை ) கு - (குதிக்கோள்) தி - ( திட்டமிடல் )
(தொடரும்)




 


Post a Comment

0 Comments